அல்டாப்பு என்ற ஒரு அரசியல்வாதி
அலாரம் வைக்கும் வசதி இல்லாததால் என்னை எழுப்பும் வேலையை சூரியனிடமே கொடுத்து இருந்தேன் . ஆனா இன்னைக்கு லேட்டு .
பதற்றத்துடன் எழுந்து கெளம்ப ஆரம்பித்தேன் .. முன்கதை சுருக்கம் சொல்லி என்னை அறிமுக படுத்தி கொள்ள ஆசைதான் .. ஆனாலும் தாமதம் என்பது அல்டாப்பிற்கு அறவே புடிக்காத ஒன்று. என் மூன்று வேலை சாப்பாடுமே அல்டாப்பிடம் ஓசியில் கிடைப்பது என்பதால் அவசர அவசரமாய் கெளம்பி கொண்டிருக்கிறேன்
கடந்த முறை 5 நிமிட தாமதமானாதால் என் வடையை எடுத்து வைத்து கொண்டு " இன்னொரு தடவை லேட்டு ஆச்சுனா இட்லியும் சாப்பிட்டுருவேன்" என கொடூரமாக முறைத்த அல்டாப்பின் முகம் நிழலாடியதால் நடையின் வேகத்தை கூட்டி மெஸ்ஸை வந்தடைந்தேன் .. மெஸ் நாயர் வழக்கம்போல கேவலமாக பார்த்து பார்வையை திருப்பினார் .. என் சொரணையை சோறு வென்று வருடங்கள் ஆனதால் சாதரணமாய் கடந்து அல்டாப்பின் டேபிளில் வந்தமர்ந்தேன்
"அப்புறம் .. சட்டை பட்டையை கெளப்புது .. புதுசா அல்டாப்பு ?" ... என்ற என் வழக்கமான பாராட்டை காதில் வாங்காமல் யோசித்து கொண்டிருந்த அல்டாப்பை பார்த்து பகீரென்றது ..வழக்கமாய் இப்படி சம்பந்தம் இல்லமால் புகழ்ந்தாலே கடைசி சொத்தை பல் வரை காட்டும் அல்டாப்பின் புது போக்கு பயத்தை அளித்தது. அதை வைத்துதான் நான் பிழைப்பையே ஓட்டுவது ..
" என்ன ஆச்சுப்பா " ? என்றதுக்கு அல்டாப்பின் பதில் என் பயத்தை நமீதா அளவு பிரமாண்டமாகியது .." நான் அரசியல்வாதி ஆகிடலாம்னு இருக்கேன் என்ன சொல்றே?" என்றான் அல்டாப்பு
இதுவரை அல்டாப்பு வாழ்க்கை , கொள்கை , எதிர்காலம் குறித்து இவ்வளவு தூரம் யோசித்ததே இல்லை. அதிகபட்சம் அவன் யோசிப்பது டிபன் சாப்பிடும்போது லஞ்ச் என்ன சாப்பிடலாம் என்பதை தாண்டி இருக்காது. உடனே இதை சரி செய்ய விட்டால் என் பொழப்பு சிரித்து விடும் என்பதால் உடனடி நிவாரண வேளைகளில் இறங்கினேன்
"என்னாப்பா திடீருன்னு ??"" ...
" ஆமாயா.. அந்த சைடு போய்டலாம்னு இருக்கேன். எங்க அப்பன் வர வர சரியா காசு தர்றதில்லை .. ஏழு கழுதை வாயசிகிடுச்சு . சும்மாவே இருக்கேன்னு திட்டுறான். ஏழு கழுதைக்கு என்னையா வயசு இருக்கும் ?? "
" எல்லா கழுதைக்கும் ஒரே வயசுதான் அல்டாப்பு . அப்பா சொல்றதுக்கெல்லாம சங்கடபடுவே .. சரி விடு.. டிபன் சொல்லிட்டியா ?? " என்ற என்னை முறைத்த அல்டாப்பு
" இப்போ யோசனை சொல்ல போறியா இல்லையா ? " என்றான் .
பசி வயிற்றை கிள்ளியது .. யோசனை சொல்லாமல் இன்று அவனும் வாங்கி தருவது போல் இல்லை ." அரசியல்னா ஒரு சாக்கடைபா ?" என்ற வழக்கமான அரசியல் இலக்கணம் சொல்லி வைத்தேன்
"இப்படியே எல்லாரும் சொன்னா யார்தான் சுத்தம் பண்ணுவாங்க. காந்தி தாத்தா என்ன சொல்லி இருக்காரு தெரியுமா ?"
என்னோட தாத்தா நான் உருப்படவே மாட்டேன் என்று சொன்னது மட்டும் ஞாபகத்தில் வந்து சென்றது ..
"அது எல்லாம் சரிப்பா ..இப்போ திடீர்னு எந்த கட்சின்னு போய் சேருவே ?? அவங்க உன்னை சேத்திக்கனுமில்ல "
" ஏன் சேத்திக்க மாட்டாங்களா ? எனக்கு என்னைய குறைச்சல் " ? என்றவனிடம் " அறிவு " என சொல்ல வாய் வரை வந்து அடக்கினேன் ..
இது சரி பட்டு வராது .. அல்டாப்பு படாமல் திருந்த போவதில்லை .
" அல்டாப்பு . அதுக்கு ஒன்னு ரவுடியா இருக்கணும் .. நீ இது வரைக்கும் கொசுவையும் குவர்டரையும் தவிர யாரையாவது அடிச்சு இருக்கியா ?"
"இல்லை .. ஆனா யாரவது அடிக்க வந்த நிக்காமே ஓடுவனே .. அது போதாதா ?"
"சரி. அதை விடு .. அதுக்கு ரொம்ப பொறுமை வேணுமே. யாரவது உன்னை கேவலமா பேசினா சிரிச்சுட்டே நிக்கணும் .. முடியுமா உன்னாலே ?"
"ஏன் முடியாது " என்று மாட்டினான் அல்டாப்பு.. கிடைத்த நல்ல வாய்ப்பை விடுவனா நான்.
" சரி .. உனக்கு ஒரு டெஸ்டு..இப்போ சாப்பிடுவோம். சாபிட்டுட்டு நாயர்கிட்ட போய் காசு தர முடியாதுன்னு சொல்லு.. அவன் திட்டரதை நீ சிரிச்சுட்டே வாங்கிட்ட நீ அரசியல்வாதி ஆகிடலாம்"
சரியென முடிவு செய்து அன்று அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு "பரிசோதனை"க்கு தயாரானான் அல்டாப்பு ..
"பில்லு 300 ரூபா " என்ற நாயரிடம் " காசு எல்லாம் தர முடியாது .என்னயா பண்ணுவே . திட்டினா திட்டிக்கயா " என்ற அல்டாப்பு என்னிடம் திரும்பி கண்ணடிக்க நானும் வெற்றி குறி காட்டி வைத்தேன்
முதல் தலைமுறை அடுத்த தலைமுறை என நாறடித்த போது பொறுத்த அல்டாப்பின் முகம் மூன்றாம் தலைமுறையை அடைந்த போதே கோணலாகியிருன்தது.. நான்காம் தலைமுறையில் விசும்பலுடன் ஐந்தாம் தலைமுறையில் அழுகையாய் வெடித்தது .. நாயரின் அடுத்த இலக்கு உடன் சாப்பிட்ட நான்தான் என்பதால் அவசரமாக சென்று பரிசோதனையை விளக்கி பைசல் செய்தேன் ..
பணத்தை கட்டி விட்டு என்னை பாவமாய் பார்த்த அல்டாப்பு " நமக்கு அரசியல் சரிபட்டு வரதுயா " என்று விரக்தியுடன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை கசக்கி எரிந்து விட்டு கெளம்பினான்.
அதில் இருந்த ஏதோ ஒன்று தான் அல்டாப்பை பாதித்து இருக்க வேண்டும் .. எடுத்து படித்து பார்த்தேன் .. அதன் பாதிப்பு நியாயமென்றே விளங்கியது
"செய்தி : ஒன்றும் இல்லாமல் அரசியலுக்குள் போனா ராசா ஒன்னரை லட்சம் கோடியுடன் ஜெயிலில் இருந்து திரும்பினார் "
டிஸ்கி : டிஸ்கியின் அர்த்தம் கூட தெரியாத அளவு நான் புது பதிவர் என்பதால் கொஞ்சம் மெதுவா திட்டுங்க .. ப்ளீஸ்
nice one..! keep it up!
ReplyDeleteyov remove word verification
pattaya killappu machi!!!
ReplyDeleteபதிவின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும். மற்றபடி, எழுதும் திறமை உள்ளது. :)
ReplyDelete//அதிகபட்சம் அவன் யோசிப்பது டிபன் சாப்பிடும்போது லஞ்ச் என்ன சாப்பிடலாம் என்பதை தாண்டி இருக்காது. ///
ReplyDeleteidhu thaan machi un style... :) all the best...
GCT-Mech-ian...
முதல் வரியிலிருந்து தொடங்கிய பட்டாசின் வேகம் இறுதிவரைக்கும் சரவெடியாக தான் வெடித்து ஓய்ந்தது :) கலக்கல் சீனியர்! நெறைய இதே மாதிரி எழுதுங்க :) செம நடை!!!
ReplyDeleteசூப்பரு"!!!! பொறாமையாக உள்ளது!
ReplyDeletehehe... good start. nalla nadai
ReplyDeleteWould you be able to write political articles too? Or not interested at this moment?
பின்னி பிடல் .... ஜூப்பரா இருந்திச்சி ... :))
ReplyDeleteமாம்ஸ்... சூப்பரு. சின்ன கான்சப்ட் வச்சு பட்டைய கிளப்பிட்டீங்க. வாழ்த்துகள். (அப்புறம் கொஞ்சம் எழுத்துப்பிழை சரி செய்ங்க மாம்ஸ்) :-)
ReplyDelete//அதிகபட்சம் அவன் யோசிப்பது டிபன் சாப்பிடும்போது லஞ்ச் என்ன சாப்பிடலாம் என்பதை தாண்டி இருக்காது. // , //நீ இது வரைக்கும் கொசுவையும் குவர்டரையும் தவிர யாரையாவது அடிச்சு இருக்கியா ?"// ------------ நல்ல நடை. ரசித்தேன் :)
ReplyDeleteArumai nanba... please continue writing
ReplyDeleteநல்லா வருவீங்க தம்பி :-))) நல்லா வருவீங்க :)))
ReplyDeleteஎழுத்துப் பிழைகள் குறைவாக உள்ளது - நன்று. நடை நன்றாக வருகிறது. அதற்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஒருவித ட்ரைனஸ் தெரிகிறது. ஒருமுறை எழுதி ட்ராஃப்டில் வைத்து, நான்கைந்து முறை படித்துப் பார்த்து கடுகு, கருவேப்பிலை தாளித்து க்ரிஸ்பாக கொடுத்துப் பாருங்கள். இன்னும் பாராட்டுப் பெறும்!
You have that Stuff!
நல்லா எழுதவருது உங்களுக்கு..பரிசல் அண்ணன் சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கங்க..கண்டினியு :)
ReplyDelete