"குட்டி.ஐ லவ் யூ " தமிழ் சினிமா கலெக்டர் யூனிபார்ம் ஆன முக்கால்கை
ரவிக்கையோடு சிம்ரன் வீறிடும் துள்ளாத மனமும் துள்ளும் க்ளைமாக்ஸ் என்
மனதுக்கு மிகவும் நெருக்கமானது . காரணம் அன்றே நானும் என் பத்தாம்
வகுப்பு ஊர் தோழர்கள் சிலரும் வயசுக்கு வந்த நாள். அதாவது ஊரிலிருந்து பொள்ளாச்சி
டவுனுக்கு தனியாக வந்து படம்பார்க்க தகுதியான வயசுக்கு வந்த நாள்.
யார் என்ன ஊர் என கேட்டாலும் வீறாப்பாக பொள்ளாச்சி என சொல்லிவிட்டாலும் ஊர் என்னவோ பொள்ளாச்சியில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் இருந்த சின்ன கிராமம்தான் . பக்கத்துக்கு ஊரில் இருந்த தியேட்டர் என பெயர் மட்டும் மாற்றப்பட்ட டெண்டுகொட்டகை வரையுமே அதுவரை தனியாக சென்று வர அனுமதி இருந்தது.டென்த் கடைசி எக்ஸாம் என்பதால் நண்பர்களோடு சென்று வர இந்த சிறப்பு அனுமதி
சில நண்பர்களை பிரியும் சோகம் , திடீரென கிடைத்த சுதந்திரமும் , பதினைந்து ரூபாயும் தந்த பரவசம் என அந்த நாளை ஞாபகம் வைக்க ஏற்கனவே தேவையான அளவு காரணங்கள் இருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படமே அவை அனைத்தையும் கோர்ப்பதாக இன்று வரை உள்ளது. விஜய் நெருக்கமானதும் அப்படியே
சற்றே வளர்ந்து டபுள் மீனிங் புரிய ஆரம்பித்த வயதில் வந்த குஷி விஜயை இன்னும் நெருக்கமாக்கியது. "மூச்சை எல்லாரும்தான் விடறாங்க" என்ற விஜயின் டயலாக்குக்கு அர்த்தம் முழுதாய் புரியா விட்டாலும் கன்னாபின்னா என வெட்கப்பட்டு வைத்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
அதன் பிறகு பள்ளி நண்பர்களை போலவே விஜயும் சில பல மொக்கை படங்கள் கொடுத்து விலகி போனார். கல்லூரியில் சரக்கடிக்க ஆரம்பித்த புதிதில் பாதி பீரில் முழு போதை ஏறி போய் பார்த்த படம் கில்லி. "மச்சி .செம படம். விஜய் கெத்துடா . பர்ஸ்ட் ஹாப் என்னா ஸ்பீடு! மப்பே இறங்கி போச்சுடா. ரூம்ல சரக்கு இருக்கா ?" என திரும்பவும் உடனடி விஜய் பேன் ஆன இரவு அது.
மீண்டும் விழுந்து போனார் விஜய். விஜய் யானை வர்க்கம் போல. பிரபுக்கு இணையாக நகைகடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. அப்பாவின் கையை உதறி மீண்டும் எழ சில வருடங்கள் ஆகி போனது. கண்டிப்பாக எழுந்து விட்டார் என்றே நினைக்கிறேன்
சமீபத்தில் குடும்பஸ்தனாக துப்பாக்கி பார்த்த போது , அதே பத்தாம் வகுப்பு சிறுவனாக கை தட்டி ரசிக்க வைத்தது விஜயின் மிக பெரிய பலம். என் பள்ளிக்கால புகைப்படத்தை எனக்கே அடையாளம் தெரியாத பொழுதில் , நான் சிறு வயதில் ரசித்த அதே உருவத்தில் அதே துடிப்புடன் அதே விஜயாக இருக்கும் அசாத்திய உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த நடிகரிடமும் இதை காண முடிவதில்லை
எத்தனையோ விமர்சனங்களை வைத்தாலும் , "விஜய் பாத்து போதுப்பா" என தமிழ்நாட்டின் அனேக குழந்தைகளை ஈர்க்கும் சக்தி உள்ள விஜய் , மீண்டும் விழுந்து எங்களை கஷ்டப்படுத்தாது, இதே கவனத்துடன் இதே துடிப்புடன் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்தி கேட்டு கொள்கிறோம்
ஹாப்பி பர்த்டே D(ea)r. விஜய் !!!