சற்று அடர்த்தியாய் வளர்ந்திருந்த அரும்பு மீசையை தடவி பார்த்து விட்டு லேசாக கர்வம் துளிர்த்த புன்னகையோடு தலையை வாரிக்கொண்டிருந்தேன்.நீங்கள் ஊகித்தது சரியே.நான் வயதுக்கு வந்து சில மாதங்கள் ஆகி விட்டிருந்தது.சுகந்தி டீச்சர் மீதிருந்த காதல் இப்போது உடன்படிக்கும் செல்வி மீது தாவியிருந்தது.கடைக்கு போய் வர சொல்லும் அம்மா மேல் கோபம் வர ஆரம்பித்திருந்தது.சினிமாவில் சண்டைகாட்சி பாரத்தால் நரம்புகள் முறுக்கேறவும், காதல் காட்சி பார்த்தால் வெட்கம் வரவும் துவங்கியிருந்தது.சாலையை கடக்கும்போது அப்பா கையை பிடித்தால் உதறிவிட்டு முறைக்கும் வயதிற்கு வந்து சிலமாதங்கள் ஆகியுள்ளது
"அம்மா!செந்திலான் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்" இப்போதெல்லாம் நான் அனுமதிக்காக காத்திருப்பதில்லை.வெறும் அறிவிப்பு மட்டும்தான்."டேய். ஆழியார் டேம் தொறந்துவிட்டுருக்கானுக.தண்ணி அதிகமா வரும்.பெரிய வாய்க்கால் பக்கம்கிக்கம் போனா அடி தொலைச்சு போடுவேன்" இரைந்துகொண்டிருந்த அம்மாவின் குரலை காதில் வாங்கும் நிலமையில் நான் இல்லை.செந்திலான் , மணியன் , குண்டாக இருப்பதால் நாங்கள் மாசாணி என செல்லமாக அழைக்கும் திலீபன் ஏற்கனவே திட்டமிட்டபடி ஊருக்கு வெளியே விநாயகர் கோவிலில் காத்திருந்தார்கள்.
இது ஒன்றும் எங்கள் முதல் ஹீரோயிச முயற்சி அல்ல . ஏற்கனவே ஓடும் பஸ்ஸில் ஏறுவது , ஹேண்டில்பார்லிருந்து கையை எடுத்தபடி சைக்கிள் ஓட்டுவது , மணியகாரர் தோப்பில் மரமேறி மாங்காய் திருடுவது என சிலபல ஹீரோயிசங்கள் ஏற்கனவே பழக்கம்தான் மாசணியை தவிர்த்து . மாசாணி இன்னும் சைக்கிள் ஓட்ட கூட கற்றுகொள்ளவில்லை. பாவம் அவன் பயந்த சுபாவம்.
இன்றுகூட வாழதோட்டத்தம்மன் கோவில் போவது மாசாணிக்கு தெரியாது.செந்தில் தோப்புக்கு போகிறோம் என நம்பிதான் உடன் வந்து கொண்டிருந்தான்.முன்னமே சொல்லியிருந்தால் மாசாணி வந்திருக்க போவதில்லை.
காரணம் , பெரியவர்கள் கூட அந்த வாழதோட்டத்தம்மன் கோவிலுக்குள் நுழைவது இல்லை.அந்த கோவிலை பற்றி சிறுவயதிலிருந்து கேட்டிருந்த அமானுஷ்ய கதைகள் அப்படி.அந்த பாழடைந்த கோவில் வழியே பகலில் கூட தனியே யாரும் கடப்பதில்லை.
"அந்த கோவில் அம்மன் ரொம்ப ரொம்ப சக்திடா.அந்த காலத்துல வருஷத்துக்கு ஒரு தடவை மைசூர் மஹாராஜா குதிரை ,யானை எல்லாம் கட்டிட்டு வந்து பூஜை எடுப்பாராம்.ஏகப்பட்ட நகை அம்மனுக்கு சாத்தி மஹாரஜா கும்பிடுவாங்களாம்." மணியன் சொன்ன கோவிலின் வரலாறு
செந்திலான் தோப்பை தாண்டித்தான் கோவில் என்பதால் எதிரே சந்தேக்கண்களை சுமந்தபடி வந்தவர்களிடம் "தோப்புக்கு போறோம் மாமா/சித்தப்பா/பெரியப்பா" என சமாளித்துவிட்டதால் கோவிலை அடைய பெரிய தடைகள் ஏதுமில்லை.கோவிலுக்குள் நுழையும்போதே ஏனோ முதுகுதண்டில் ஜிலீரென்றது.எதிர்பாராத இந்த திடீர் கோவில் விஜயத்தால், மாசாணி கிட்டதட்ட அழுகையின் விளிம்பில் இருந்தான்.கோவிலின் வாயிலில் பாதி புதரில் மறைந்து மீதி வெளியில் நீட்டியபடி இருந்த துருப்பிடித்த சூலம் அமானுஷ்யத்தை சற்று அதிகப்படுத்தி காண்பித்தது.
பாதி எரிந்த ஊதுபத்தியும், சூடமும் பாழடைந்த தேர்மாடம் முன்பு கிடந்ததை கவனித்துவிட்ட மாசாணி வீறிட்டான்.
"ஏன்டா மணியா.யாருமே வர மாட்டாங்கனு சொன்னே.இங்கே யாரோ பூஜை பண்ணியிருக்காங்க.திரும்பி போய்டலாம்டா" மாசாணியின் திகில் உறைந்த குரலை கோவில் மண்டப மணி காற்றில் ஆடி சப்தமாய் ஆமோதித்தது.
"வேட்டையனூர் பெரிய கவுண்டருக்கு இது குலதெய்வம்டா.எப்பவாது ஒருக்கா பூஜைக்கு வருவாங்க.ஆனா இது வரைக்கும்தான்.அந்த கிணத்துபக்கம் போக மாட்டாங்க.பூஜைக்கு தண்ணி வேணும்னா கூட பக்கத்து காட்டிலிருந்துதான்." மணியன் விளக்கினான்
ஏற்கனவே அரசல்புரசலாக ஏன் என தெரிந்திருந்தும் நடுங்கிய குரலில் மாசாணி "ஏன்?" என்றான்.
மணி சற்று குரலை தாழ்த்தி கொண்டு தொடர்ந்தான்."ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி திருவிழா முடிஞ்சு நகையோட இருந்த சாமியை ரெண்டு திருடனுக திருட வந்தானுக.நகையை எடுத்துட்டு சாமியை இந்த கிணத்துக்குள்ள போட்டுட்டானுக.சாமிக்கு கோவம் வந்து அவனுகளை அப்படியே கிணத்துல இழுத்துடுச்சு.அடுத்த நாள் அவங்க பொணம்தான் மெதந்துச்சு கிணத்துல"
"அப்புறம்?'"
கதையை செந்தில் தொடர்ந்தான் "எங்க காட்டுல நைட்டு வேலை செய்யறவங்க நிறைய பேரு அந்த திருடனுகளோட ஆவியை பாத்திருக்காங்க.நைட்டு உலாத்துமாம்.அப்பறம் அம்மன்சாமியும் கிணத்துக்குள்ள இன்னும் கோபமா இருக்கு.யாரு கிட்ட போனாலும் கிணத்துக்குள்ளார இழுத்துரும்."
மாசாணி இப்போது எங்களை பார்த்த பார்வையில் பயமும் வெறுப்பும் சரிபாதி கலந்திருந்தது.அதை அலட்சியபடுத்தியபடி செந்திலிடம் "சும்மா கிணத்துகிட்ட போய் பாப்பமா?!" என்றபடி கண்ணடித்தேன்.
"டேய் வேணாம்டா!!" என மாசாணி அலறியதை பொருட்படுத்தாது கிணற்றின் விளிம்பை சென்றடைந்தோம். கிணத்தை சற்று எட்டி பார்த்த அடுத்த நொடி , மணியன் "அய்யோ..சாமி இழுக்குது.இழுக்குதுடா "என அலறிகொண்டே கைகாலை வேகமாய் உதறியபடி கீழே விழுந்தான்.நாங்கள் எதிர்பார்த்தபடியே தூரத்தில் நின்றிருந்த மாசாணி பின்னங்கால் பிடரியை தாண்டி நெற்றியில் படும்படி ஓட ஆரம்பித்திருந்தான்.
எங்கள் திட்டம் பெருவெற்றி."மாசாணி!நில்றா.சும்மா விளையாட்டுக்குடா.." எங்கள் குரல் கேட்கும் தொலைவில் மாசாணி இல்லை.வயிற்றை பிடித்தபடி அதே இடத்தில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கும போதுதான் எங்களுக்கு அது உறைத்தது .சட்டென உறைந்துபோய் அமைதியானோம். ஆளில்லா அந்த அத்துவானகாட்டில் இரண்டு ஆண்களின் மெல்லிய அழுகை சப்தம் மட்டும் அந்த கிணற்றின் சுவற்றில் மோதி எதிரொலித்துகொண்டிருந்தது.