அல்டாப்பு தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தான்.. ஒரு வித்தியாசாமான
அலறலோடு .. பொள்ளாச்சியில் ஓட அவ்வளவு இடம் இல்லாத காரணத்தால் எப்படியும் திரும்பி இந்த தெருவுக்குள்தான் வந்தாக வேண்டும் .. காத்திருந்தேன் .
பொள்ளாச்சியில் இது என் தொழிலுக்கு மந்தமான காலம். என் வேலை ஷூடிங்க்க்கு ஆள் பிடித்து கொடுப்பது.. லட்சியம் அப்படியே இயக்குனர் ஆகி விடுவது ..
நீங்கள் முகத்தை மறைக்காமாலே சிரித்து கொள்ளலாம் .. பழகி விட்டது ..
எதிர்பார்த்தபடி அல்டாப்பு வந்து சேர்ந்தான் .. "என்ன ஆச்சு ? ஏன் இப்படி போலிசை பாத்த எக்ஸ் மினிஸ்டர் மாதிரி ஓடிட்டு இருக்கே ? " என்றதுக்கு
" அப்புறும் சொல்றேன். பின்னாடி யாரவது வாராங்களான்னு பாரு ? ".. ஆதீனங்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்க்கு அல்டாப்பின் பின்னால் என்ன வேலை .. இருந்தும் பார்த்தேன். ஈ காக்கா இல்லை. சம்பந்தமே இல்லாத ஈயையும் காக்காவையும் ஒரே சொற்றொடரில் வைத்த தமிழரது புலமையை வியந்து கொண்டிருக்கும்போதே " இங்க நிக்க கூடாது . வா போலாம் " என்றான் அல்டாப்பு

உடன் நடந்தேன் .. பெரும்பாலும் அல்டாப்பிடம் நான் கேள்விகள் கேட்பதில்லை. நாலு வாரமாய் சாப்பிடதாவனிடம் ஏப்பத்தை எதிர்பார்ப்பதை விட கொடுமையான செயல் அல்டாப்பிடம் அறிவை எதிர்ப்பார்ப்பது . திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்த அல்டாப்பு ஒதுக்குபுறமான இடம் வந்ததும் பயணத்தை நிறுத்தினான் .
சரத்குமார் பட பஞ்சாயத்து சீனில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல முகம் முழுக்க போலியான ஆர்வத்தை தேக்கி வைத்து அவனை பார்த்து கொண்டிருந்தேன். அல்டாப்பே பேச்சை துவக்கினான்.
'ஏன்யா.. இந்தா ஆதீனம்க்றது யாருயா ?"
"அவங்களா.. மடாதிபதிகப்பா "
"நான் வேற நம்ம ஊருக்கு வந்த ஆதீனதிகிட்ட போன சிடி பிரிண்டு சரி இல்லை. அடுத்த படம் எப்போன்னு கேட்டு தொலைச்சுட்டேன். அதன் தொரத்துறாங்க. இப்போ என்னையா பண்றது ?"
ஆதீனங்களை மிக சரியாக புரிந்து கொண்டுள்ள அல்டாப்பு சட்டென்று ஒரு கணத்தில் எனக்கு அறிவாளி போல தோன்றினான். சை . மாயை. அப்படி இருக்க வாய்ப்பில்லை . இந்த உலகம் எத்தகைய முட்டாள்களை கொண்டிருந்தால் அல்டாப்பையே அது அறிவாளியாய் காண்பிக்கும் . அது சரி . ஆதீனங்கள் கடவுளாய் இருக்கும் உலகில் அல்டாப்பு என்ன தூசு ..
அதற்குள் அல்டாப்பை தேடி அலைந்த கூட்டம் எங்களை நெருங்கி விட்டுருந்தது .. ஆதீனத்தையும் சேர்த்து ..
'ஏன்யா.. இந்தா ஆதீனம்க்றது யாருயா ?"
"அவங்களா.. மடாதிபதிகப்பா "
" என்னது. மட சாம்பிரானியா ?"
"அவங்களை பாக்கா போறவங்க பேர்தான் மடசாம்பிராணி . இவனுக அந்த மடத்துக்கு அதிபதி.. சாமியார் மாதிரி .. ஏன் கேக்குறே ?"
"ஓ. சாமியாரா .. அதுக்குதான் அடிக்க வராங்களா ..ஹ்ம்ம் .."
அல்டாப்பின் முகம் வியர்க்க துவங்கி இருந்தது ..
அல்டாப்பின் முகம் வியர்க்க துவங்கி இருந்தது ..
"நான் வேற நம்ம ஊருக்கு வந்த ஆதீனதிகிட்ட போன சிடி பிரிண்டு சரி இல்லை. அடுத்த படம் எப்போன்னு கேட்டு தொலைச்சுட்டேன். அதன் தொரத்துறாங்க. இப்போ என்னையா பண்றது ?"
ஆதீனங்களை மிக சரியாக புரிந்து கொண்டுள்ள அல்டாப்பு சட்டென்று ஒரு கணத்தில் எனக்கு அறிவாளி போல தோன்றினான். சை . மாயை. அப்படி இருக்க வாய்ப்பில்லை . இந்த உலகம் எத்தகைய முட்டாள்களை கொண்டிருந்தால் அல்டாப்பையே அது அறிவாளியாய் காண்பிக்கும் . அது சரி . ஆதீனங்கள் கடவுளாய் இருக்கும் உலகில் அல்டாப்பு என்ன தூசு ..
அதற்குள் அல்டாப்பை தேடி அலைந்த கூட்டம் எங்களை நெருங்கி விட்டுருந்தது .. ஆதீனத்தையும் சேர்த்து ..
"யோவ்..நீ கேட்ட அந்த வீடியோ கேமரா வாங்கி தர்றேன். ஏதாவது பண்ணி காப்பத்துயா" என அவன் சொன்னவுடன் டக்கென அந்த யோசனை உதித்தது .. அல்டாப்பின் காதில் கிசுகிசுத்தேன். அல்டாப்பு அதை கூட்டத்தை பார்த்து கம்பீரமாய் சொன்னவுடன் கூட்டம் சிதறி ஓடியது .. ஆதீனம் உள்பட
" என் கனவுலே சிவன் தான்யா வந்து அதை கேக்க சொன்னாரு. எதை பேசறதா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கோங்க "
தப்பித்த சந்தோஷத்தில் குதூகலித்த அல்டாப்பு " யாருயா அந்த சிவன் ? செம ஆளா இருக்காப்ல " என்றான்
சிவன் யாரென தெரிந்தால்தான் ஆதீனங்களின் பொழப்பு சிரித்து விடுமே என் எண்ணியபடி " எல்லாம் தெரிஞ்சவர்தான் " என் சொல்லி வைத்தேன்
..... தொடரும்
அருமை நண்பரே..
ReplyDelete//நீங்கள் முகத்தை மறைக்காமாலே சிரித்து கொள்ளலாம் .. பழகி விட்டது//..
//எல்லாம் தெரிஞ்சவர்தான்//
சூப்பர் டச்.!!
அல்டாப்பு! ஆள்டாப்பு!
ReplyDeleteவர்ணணைகள் superb
ReplyDelete