Wednesday, January 23, 2013

ஒரு (ம)ரண சாசனம்

காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும் பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அதில் ஒன்று " விஷம்"

குடிப்பதாக முடிவு செய்தாகிவிட்டது. அரை நொடி அசட்டு துணிச்சல் போதும். கசக்கும் என்ற ஒரே கஷ்டத்தோடு அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரலாம் என்ற அசட்டு நம்பிக்கை. உடலின் எதோ ஒரு மூலையில் வேண்டாம் என கதறி கொண்டிருந்த மனதை அடக்கி குவளையை  கையில் எடுத்தேன் . நடுங்கி கொண்டிருந்த விரல்கள் சற்று விறைப்பானது.

கிராமத்து கூட்டு குடும்பமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பகிர்ந்து கொண்டாலே பாதி துயர் குறைந்திருக்கும். நகரத்து ஒண்டி குடித்தன சமூக அமைப்பு குறித்து மனதுக்குள் படு மோசமாக திட்டி கொண்டேன்.


 "ஏன் இந்த முடிவு?"  என்று யாராவது கேட்டால் பெரும் ஓலம் எடுத்து "விதி" என்று கத்த வேண்டும் போல இருந்தது. கேட்பார் யாருமில்லை.கத்தியும் பிரயோஜனமில்லை. குவளை வாயை நெருங்கி இருந்தது.

கடைசியாய் ஒரு முறை அம்மா கையால் சாப்பிட வேண்டும் போல இருந்தது .திடீரென சம்பந்தமில்லாமல்  பாராட்டோ சால்னா கூட ஞாபகத்தில் வந்து சென்றது . முட்டாள்தனம். இனி தாமதிப்பதில் உபயோகமில்லை. 


"மடக்" .. 


குடித்தே விட்டேன் . பல நூறு
கத்திகளென  தொண்டையை  கிழித்து கொண்டு மிக வேகமாய் இறங்க துவங்கியது திரவம்.  பார்வை சற்று மங்கலாக துவங்க ஏதோதோ ஞாபகங்கள் தோன்றி மறைய , சன்னமாகி விட்ட குரலை தேடி கண்டு பிடித்து சொன்னேன்

" ரசம் ரொம்பவே நல்லா  இருக்கு ப்ரியா. முதல் தடவை மாதிரியே தெரியலே"


" உங்களுக்கு புடிக்கும்னு தெரியும். அதன் லஞ்சுக்கும் சேத்து கட்டி 

இருக்கேன் "

சரி விடு. சத்ரியனின் நாக்குக்கு ஒரு தடவைதான் மரணம்.


நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும்
பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அந்த  மற்றொன்று 
" ரசம்"







20 comments:

  1. ஹா ஹா ஹா...செம்ம...:))))

    ReplyDelete
  2. Good and Nice.... Enjoyed the situation...(Same Blood)

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் இந்த முதல் ரச அனுபவம் இருக்கும்ங்கற நம்பிக்கைல போட்டதுதான் :-)

      Delete
  3. யோவ்... கண்டிப்பா அதாவது கிடைக்குதே. அதுவும் கிடைக்காம போயிடப் போவுது

    ReplyDelete
    Replies
    1. கல்யாணமாகி ரொம்ப வருஷம் கழிச்சுதான் உங்க அளவு பக்குவம் கிடைக்கும்னு நம்புறேன் :-)

      Delete
  4. சரியான ரைட்டப் :))

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் கையால் ஆசிர்வாதம்(பழமொழி முழுசா ஞாபகத்துக்கு வரல):-) . நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வச்ஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பதுதான் அது.. நல்லாயிருக்கு ரசம்..:-)

      Delete
  5. ஹ ஹா :-) நான் எதோ விகடன்ல வந்த என் அப்பள ட்வீட்டை பார்த்து மனசு நொந்து நீங்களும் இந்த மாதிரி ஒரு விபரீத முடிவுக்கு வந்திட்டீங்கன்னு நினைச்சு பயந்துட்டேன் :-) நல்ல வேளை :-) நிறைய பேர் "இனி நாங்க விகடனே வாங்க மாட்டோம்"னு தீர்மானிச்சு இருக்காங்க பா :-)

    ReplyDelete
  6. ம்க்க்ம் இதற்கு என் கருத்துக் கேட்டு மென்ஷன் வேறு! விஸ்வரூபம் தடை செய்யப் பட்ட இந்தத் தருணத்தில் விஷம் என்று படிக்கும் பொழுது தற்கொலை தான் நினைவிற்கு வந்தது. மனைவியின் சமையல் பற்றியது என்ற சஸ்பென்ஸ் கடைசியில் உடைவது சிறப்பு :-)))) சூப்பரா எழுதியிருக்கீங்க :-) ஆனா மனைவியின் சமையலை இப்படி குறை கூறி எழுதியதற்குக் கனடனங்கள் :-))))

    amas32

    ReplyDelete
    Replies
    1. என் மனைவியார் நல்லாவே சமைப்பாங்க ( சொல்லிட்டேன் பாருங்க ) . இது வெறும் பகடி புனைவு :-)

      Delete
  7. யோவ் ..... என்னாங்கடா பயபுள்ள சீரியஸா ட்ரை பண்ணுதுன்னு பயந்துகிட்டே படிச்சேன்... தொல ..... சூப்பரப்பு :)

    ReplyDelete
    Replies
    1. இது எவ்ளோ சீரியஸ் மேட்டர். இதை போய் இப்படி சொல்லிட்டியே :-)

      Delete
  8. என் அமைச்சனல்லவா!? அதான் உன் சிந்தையும் செயலும் என்னைப்போலவே இருக்கிறது¡ மிளகு விசம் பற்றி சிலநாட்கள் முன்பு துண்டிலக்கிய டுவீட்டு போட்டிருந்தேன் பார்த்தாயா!

    ReplyDelete
    Replies
    1. குருநாதா. அந்த துண்டிலக்கியம் மறைமுகமாக தூண்டிய இலக்கியம்தான்(???!!) இதுவென கருதுகிறேன் .. :-)

      Delete
  9. ஹா.. ஹா.. ஹா... முடியலயே என்னால, நல்ல எழுத்து நடை பாஸ்....

    ReplyDelete
  10. அடுத்து தோழர், உப்புமா-க்கும் ஒரு ப்ளாக் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....

    அருமையான பதிவு சகா...!!!

    ReplyDelete